கபிஸ்தலம் அருகே கள்ள நோட்டை புழக்கத்தில் விட்ட நபர் பிடிபட்டார்..
அவரிடம் இருந்த 21-ஆயிரத்து 600-ரூபாய் கள்ள பணம், செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார்..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலம் அருகே அளவந்திபுரம் மெயின் ரோட்டில் பாலாஜி மற்றும் கண்ணன் ஆகியோர் பெட்டிக்கடைகளில்..
திருவாரூர் மாவட்டம் அய்யம்பேட்டை வெள்ளாளர்தெரு, மணக்கால் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (30) என்பவர் 200-ரூபாய் கள்ள நோட்டை கொடுத்து 20-மற்றும் 30-ரூபாய்க்கு பொருட்கள் வாங்கி மீத சில்லற தொகையினை சேர்த்து வந்துள்ளார்..
மணிகண்டன் கொண்டு வந்த 200-ரூபாய் பணத்தைக் கண்ட பொதுமக்கள் சந்தேகப்பட்டு கபிஸ்தலம் காவல் நிலையத்திற்க்கு தகவல் அளித்ததின் பெயரில்..
அந்தப் பகுதிக்கு வருகை தந்த கபிஸ்தலம் காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி தலைமையிலான போலீசார் மணிகண்டனை பிடித்து அவரிடம் இருந்த 200-ரூபாய் கள்ள நோட்டுகளான, 108-எண்ணிக்கை நோட்டுகள் மொத்தம் 21-ஆயிரத்து 600-ரூபாயும், ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் இரண்டு சக்கர வாகனம் மற்றும் ஆண்ட்ராய்டு செல் போன் ஒன்றையும் கைப்பற்றி..
மணிகண்டனை கபிஸ்தலம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

