Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் போதை மாத்திரை விற்பனை செய்த மூன்று பேர் கைது

திருச்சி அரியமங்கலம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட அம்பிகாபுரம் மதுபான கடை அருகே போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அரியமங்கலம் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்துக்கொள்வது மூன்று பேர் போதை மாத்திரை விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது . இதையடுத்து போலீசார் மேற்கண்ட 3 வாலிபர்களையும் பிடிக்க முயன்றனர். அப்பொழுது அவர்களில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். பிடிபட்ட இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரணை செய்த போது திருவெறும்பூர் காட்டூர் அண்ணா நகர் சேர்ந்த தினேஷ்குமார் (21) என்பதும், அரியமங்கலம் ஜிடி நாயுடு தெருவை சேர்ந்த நிவாஸ் பாபு (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கண்ட இரண்டு பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 100 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளனர்.மேலும் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிய அரியமங்கலம் கணபதி நகரை சேர்ந்த சத்யேந்திரன் (28) என்பவரை தேடி வருகின்றனர்.

இதேபோன்று திருச்சி பாலக்கரை ஆலம் தெரு பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்த குட்ஷெட் ரோடு பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் (32) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 100 போதை மாத்திரைகளையும்,ஊசிகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

error: Content is protected !!