சென்னை, கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அந்த தொகுதி மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். வேட்பு மனு தாக்கல் செய்தவுடன் கொளத்தூர் தொகுதியில் ஏராளமான தொண்டர்கள் மத்தியில் முதல்வர் ஸ்டாலின் வாகனம் ஊர்ந்து சென்றது. பொதுமக்கள் முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோவிற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். திமுக கூட்டணிக்கே சாதகம், திமுக மதச்சார்ப்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளேன் . 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். குளத்தூர் தொகுதி சாதனை புத்தகத்தையும் முதல்வர் ஸ்டாலின் வௌியிட்டார்.

