தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகனாகவும் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் பந்தைய வீரருமாக இருப்பவர் அஜித்குமார். இவரது தாயார் மோகினி மணி (85). வயது முதிர்வு காரணமாக மோகினி மணி உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை 8.45 மணிக்கு மரணம் அடைந்தார்.தாயார் மரணம் அடைந்த தகவல் கார் பந்தய பயிற்சிக்காக துபாயில் இருக்கும் அஜித்குமாருக்கு தெரிவிக்கப்பட்டது. இவர் இன்று காலை துபாயில் இருந்து புறப்பட்டு சென்னை வந்தடைந்தார். அஜித் தாயாரின் இறுதி சடங்கு நாளை காலை சென்னை பாலவாக்கத்தில் உள்ள வீட்டில் நடக்கிறது.இந்த நிலையில், நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினியின் உடலுக்கு முதல்-அமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அஜித்குமாரின் தாயார் உடலுக்கு முதல்-அமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.மேலும் அஜித்துக்கு முதல்-அமைச்சர் விஜய் ஆறுதல் கூறினார்.
