Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரியலூர்.. சில்லறை காசுடன் மனுதாக்கல் செய்த நா.க வேட்பாளர்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. அரியலூர் சட்டமன்ற தொகுதிக்கு இன்று நாடாளுமன்ற கட்சி வேட்பாளராக தங்க. சண்முக சுந்தரம் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். இவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய வரும் பொழுது, வழங்க வேண்டிய வைப்புத் தொகைக் காண ரூபாய் 10 ஆயிரத்தை, ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய், பத்து ரூபாய் காசுகளாகவும், பத்து ரூபாய், இருபது ரூபாய் நோட்டுகளாகவும் பச்சை தூண்டில் கட்டி எடுத்து வந்தார். இவர் தனது வேட்பு மனுவை அரியலூர் கோட்டாட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான த. பிரேமியிடம் வழங்கினார். பின்னர் வைப்புத் தொகையை, கோட்டாட்சியரின் மேஜை மேல், பச்சைத்துண்டில் விரித்து வைத்தார். பின்னர் கடவுளின் மேல் ஆணையிட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டார். இதனையடுத்து இவருடைய மனுவை பெற்றுக் கொண்ட கோட்டாட்சியர் த.பிரேமி, இவர் வழங்கிய வைப்புத் தொகையை, சக அலுவலர்களிடம் கொடுத்து சரி பார்க்க சொன்னார். அலுவலர்கள் அரை மணி நேரம் சில்லறை காசுகளையும் நோட்டையும் எண்ணி முடித்து சரியாக இருப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவித்தனர். இதன் பின்னர் வேட்பாளராக போட்டியிடும் தங்க. சண்முகசுந்தரம் தேர்தல் நடத்த அலுவலர் வழங்கிய அத்தாட்சி கடிதங்களை பெற்றுக் கொண்டு சென்றார்.

சில்லறை காசுகளை எண்ணி முடிக்க நேரமானதால், வேட்புமன தாக்கல் செய்ய வந்திருந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் புகழேந்தி சிறிது நேரம் காத்திருந்தார்.

error: Content is protected !!