Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஈரானுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கை

ஈரானுக்கும், அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுப்படைகளுக்கும் இடையிலான போர் தொடங்கி ஒரு மாதம் ஆகிவிட்டது. பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதால் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களை தாக்குவதை 10 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் கடந்த சில தினங்களுக்கு முன்பு தெரிவித்து இருந்தார்.
இந்தநிலையில், டிரம்ப் தனது ட்ரூத் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஈரானில் நமது ராணுவ நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, அமெரிக்கா ஒரு புதிய மற்றும் மிகவும் நியாயமான ஆட்சியுடன் தீவிர பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது. இதில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், விரைவில் ஒரு உடன்பாடு ஏற்படவில்லை என்றால் ஹார்முஸ் ஜலசந்தியும் உடனடியாக பயன்பாட்டிற்கு திறக்கவிட்டால் இதுவரை “தொடாத” அவர்களின் அனைத்து மின் உற்பத்தி நிலையங்கள், எண்ணெய் கிணறுகள் மற்றும் கார்க் தீவு ஆகியவற்றை வெடிவைத்து தகர்த்து முற்றிலுமாக அழிப்பதன் மூலம் ஈரானில் நமது இனிமையான தாக்குதலை முடிவுக்கு கொண்டு வருவோம்.

பழைய ஆட்சியின் 47 ஆண்டுகால “பயங்கரவாத ஆட்சியில்” ஈரான் படுகொலை செய்து கொன்ற நமது பல வீரர்களுக்கும் மற்றவர்களுக்கும் பழிவாங்கும் நடவடிக்கையாக இது இருக்கும்.
என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!