சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் நாளை (ஏப்.1) பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடைபெறும் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

