ஸ்வீடனில் போதைக்கு அடிமையான தனது மனைவியை கணவர் ஒருவர் சுமார் 120 நபர்களுக்கு விற்றுள்ளார். 62 வயதான அந்த கொடூர கணவர், அந்த நபர்களுடன் கட்டாயப்படுத்தி பாலியல் செயல்களில் ஈடுபட வைத்துள்ளார். அவர் மீது தற்போது பாலியல் பலாத்காரம், வன்முறை தாக்குதல் போன்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 13-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ள இந்த வழக்கு குறித்து தகவல் வெளியாகி, ஒட்டுமொத்த நாடும் அதிர்ந்து போயுள்ளது.

