திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி யில் நாளை ஏப் (2ந்தேதி) விஜய் வேட்பு மனு தாக்கல் செய்கிறார். இந்நிலையில் விஜய் ரோடு ஷோ நடத்த தேர்தல் கமிஷன் அனுமதி மறுத்துள்ளது. மேலும் 4 மணி நேரம் மட்டுமே பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். பெரம்பூர் தொகு தியில் விஜய் நேற்று முன்தினம் தேர்தல் நடத்தும் அதிகாரி கீதாவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பின்னர் அங்குள்ள பஸ் நிலையம் அருகில் விஜய் பிரசார வேனில் நின்றபடி பேசி தனது தேர்தல் பிரசாரத்தை துவங்கினார்.
நாளை விஜய் வேட்பு மனு தாக்கல்
இதையடுத்து விஜய் நாளை 2ந்தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணி அளவில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வருகிறார். பிறகு விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் திருச்சி கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய் கிறார். திருச்சி கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகம் பாலக்கரை மெயின்ரோட்டில் மாநகராட்சி 2-வது மண்டல குழு அலுவலக வளாகத் தில் உள்ளது. உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகம் திருச்சி கிழக்கு தாலுகா அலுவலகம் விமான நிலையம் அருகில் கொட்டப்பட்டு என்ற இடத்தில் உள்ளது. இதில் ஏதாவது ஒரு இடத்தில் விஜய் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்காக, அந்த இரண்டு இடங்களையும் தமிழக வெற்றி க்கழகத்தின் மூத்த நிர்வாகிகளான முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், குப.கிருஷ்ணன் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.
4 இடங்களில் பிரச்சாரத்திற்கு அனுமதி
பின்னர் மூத்த நிர்வாகிகளும் திருச்சியை சேர்ந்த த.வெ.க. நிர்வாகிகளும் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றனர் .
அங்கு போலீஸ் கமிஷனர் காமினியிடம், நாளை விஜய் திருச்சி டி.வி.எஸ். டோல்கேட், மரக் கடை எம்.ஜி.ஆர். சிலை
கே.கே.நகர், ஏர்போர்ட் வயர் லஸ் ரோடு ஆகிய 4 இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்வதற்கு அனுமதி கேட்டும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தரும்படி கேட்டும் மனு கொடுத்தனர்.
பிரசாரத்திற்கு அனுமதி
இதையடுத்து காந்திக்மார்க்கெட் மரக்கடை பகுதியில் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நாளை
காலை விமானம் மூலம் திருச்சி வரும் விஜய், காலை 11மணியள வில் மாநகராட்சி 2-வது மண்டல குழு அலுவலக வளாகத் தில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். தொடர்ந்து மரக்கடை பகு திக்கு சென்று பிரசாரம் மேற் கொள்ள உள்ளார். விஜய் பிரசாரத்தை யொட்டி போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
ரோடு ஷோவுக்கு அனுமதி வழங்கவில்லை.
திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வேட்பு மனு தாக்கல் செய்யும் நெடுக ரோடு ஷோ செல்ல அனுமதி வாங்கவில்லை. எனவே ரோடு ஷோ நடத்த விஜய்க்கு அனுமதி வழங்கவில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
தொண்டர்கள் உற்சாகம்
த.வெ.க. தலைவர் விஜய் நாளை திருச்சி கிழக்கு தொகுதியில் வேற்றுமுன் தாக்கல் செய்து பிரச்சாரம் செய்வது தொடர்ந்து திருச்சி த.வெ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
தயார் நிலையில் தேர்தல் அலுவலகம்
திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டியிடுவதா தேர்தல் பிரசார பணிகளை த.வெ.க.வினர் தீவிரமாக மேற்கொண்டு
வருகின்றனர். பிரசாரத்தை ஒருங்கிணைத்து நடத்துவதற்காகவும், தேர்தல் பணிகளை செய்வதற்காகவும், அவ்வப்போது நிர்வாகிகளை ஒருங்கிணைத்து ஆலோசனை நட துவதற்காகவும், வாக்கு சேகரிப்பு பணிகளை திட்டமிடுவது காகவும் தலைமை தேர்தல் அலுவலகத்தை அமைப்பதற்கு த.வெ.க. தலைமை சார்பில் திருச்சி கிழக்கு தொகுதியில் இடம் தேர்வு செய்ய உத்தரவிடப்பட்டது. அதன்படி திருச்சி – தஞ்சை சாலையில் பழைய பால்பண்ணை அருகில் ஒரு பெரிய கட்டிடத்தை த.வெ.க. நிர்வாகிகள் தேர்வு செய்து உள்ளனர். முதல்கட்டமாக அந்த அலுவலகத்தை த.வெ.க. தலைமை தேர்தல் அலுவலகமாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

