Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கும்பகோணம் அருகே 9ம் வகுப்பு மாணவி கர்ப்பம்… உறவினர் போக்சோவில் கைது

கும்பகோணம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி தனக்கு வயிற்று ஏற்பட்டதாக குடும்பத்தினரிடம் தெரிவித்ததை அடுத்து, கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அந்த மாணவியை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, மாணவி 5 மாத கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள், அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார், மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து, அதே ஊரைச் சேர்ந்த மாணவியின் உறவினரான அமுல்ராஜ் (35) என்பவரை போலீசார் கைது செய்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவின் பேரில் அவரை சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!