தமிழகத்தில் ஒரே நாளில் கையெழுத்திட்டு மதுவிலக்கு கொண்டுவர முடிந்தாலும் அதில் பல சிக்கல்கள் உள்ளன என சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் அதிக எண்ணிக்கையிலான குடி நோயாளிகளை உருவாக்கி வைத்துள்ளோம்; அவர்களைக் குணப்படுத்த மருத்துவர்கள், உளவியலாளர்களுடன் கூடிய மறுவாழ்வு மையங்கள் தேவை. மதுவிலக்கு குறித்து பிரம்மாண்ட விழிப்புணர்வுப் பிரச்சாரம் விரைவில் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
