Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சையில் மாற்றுதிறனாளி வாக்காளர்கள் விழிப்புணர்வு பேரணி

மாற்று திறனாளிகள் பங்கேற்ற வாக்காளர்கள் விழிப்புணர்வு பேரணியில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் புகைப்படம் ஒட்டிய ஸ்டிக்கர் இருசக்கர வாகனத்தில் ஒட்டப்பட்டு இருந்தது

தஞ்சை சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக மாற்று திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

மாவட்ட அருங்காட்சியகத்தில் இருந்து துவங்கிய பேரணியை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பேரணியில் பங்கேற்க வந்த வாகன ஓட்டிகளில் ஒரு சிலர் தங்கள் வாகனத்தில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் புகைப்படம் அச்சிட்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது.

பொதுவாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து அரசியல் கட்சியை சார்ந்த தலைவர்கள் புகைப்படங்கள் அப்புறப்படுத்தப்பட்டன.

இந்த நிலையில் தேர்தல் குறித்த விழிப்புணர்வு பேரணியில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் புகைப்படம் ஒட்டப்பட்ட வாகனம் பேரணியில் பங்கேற்க அனுமதித்தது அதிகாரிகளின் அலட்சிய போக்கை காட்டியது.

மேலும் மாற்றுத்திறனாளிகள் துறை அலுவலர்கள் ஆங்காங்கே நின்று செல்ஃபி எடுத்துக்கொண்டு காலத்தை கடத்திக் கொண்டிருந்தனர்.

error: Content is protected !!