Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பணம் பறித்த முதியவர் கைது

திருச்சி தென்னூர் உழவர் சந்தை திடலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதிரித்து நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.
முதல்வர் பேசி முடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பியவுடன் மேடையில் இருந்த நபரின் ரூ.5.5 ஆயிரம் பணத்தை முதியவர் ஒருவர் பறித்துக்கொண்டு தப்பிச்செல்ல முயன்றார்.
இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அவரைப் பிடித்து தாக்கினர். பின்னர், அவரை தில்லை நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர், சென்னையைச் சேர்ந்த பாஸ்கர் (55) என்பதும், பணப் பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!