செம்மண் குவாரி வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். வானூர் அருகே பூத்துறை செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளியதில் அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் போதிய சாட்சிகள் இல்லாத காரணத்தினால் 7 பேரையும் விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

