திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் கே.நித்தியானந்தத்திற்கு திமுக கட்சி அலுவலகத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் பேரணியாக சென்று அவர்

பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ராமகிருஷ்ணனசாமி அவர்களிடம் வேட்பு மனு தாக்கல் செய்யதார்.
இதில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி திமுக தொகுதி பொறுப்பாளர் டாக்டர் மகேந்திரன், பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் காங்கிரஸ் சார்பில் தெற்கு மாவட்ட செயலாளர் சக்திவேல், மதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் குகன் மில் செந்தில், விசிக சார்பில் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வேட்பாளர் நித்தியானந்தம் பெண்கள் முன்னேற்றத்திற்கும் பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பாக செயல்படுகின்றன அவர்களுக்கு பயிற்சி களன்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் பொள்ளாச்சியை மாவட்டமாக அறிவித்து சுற்றுலாத்தலமாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் இதன் மூலம் நமது பகுதி மக்களின் வாழ்வாதாரம் மேன்மை அடையும் தமிழக முதல்வர் அறிவிக்கும் திட்டங்கள் செயல்படுத்தும் திட்டங்கள் பொள்ளாச்சியில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் பொள்ளாச்சி பகுதியில் முன்னிலை பகுதியாக மாற்ற நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

