Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வெயில் வாட்டிய கரூரில் மழை.. அரவக்குறிச்சி மக்கள் மகிழ்ச்சி

வெயில் வாட்டிய கரூரில் கருமேகம் குவிந்து மழை – அரவக்குறிச்சியில் குளிர்ந்த சூழல் மக்கள் மகிழ்ச்சி.

தமிழகத்தில் கடும் வெயில் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், கரூர் மாவட்டமும் வெப்ப அலைக்குள் சிக்கி பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வந்தனர்.

குறிப்பாக க.பரமத்தி பகுதிகளில் கடந்த சில நாட்களாக 100 டிகிரி செல்சியஸ்க்கு மேல்

வெப்பநிலை பதிவாகி வந்தது.

இந்நிலையில் இன்று காலை முதலே வெயில் வாட்டி வதைத்த நிலையில் , மதியத்திற்கு பின்னர் திடீரென கருமேகங்கள் சூழ்ந்தன. தொடர்ந்து அரவக்குறிச்சி அருகிலுள்ள மலைக்கோவில்,

சீட்டப்பட்டி காலனி, நாகம்பள்ளி, மணல்மேடு, புத்தாம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

திடீர் மழையால் வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான சூழல் நிலவியது. கடும் வெயிலால் அவதிப்பட்டிருந்த பொதுமக்கள் மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!