Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மே.4க்கு பிறகு ICU போய்டுங்க”- பழனிசாமியை விளாசிய பிரேமலதா

2024ஆம் ஆண்டு ராஜ்யசபா எம்.பி சீட் தருவதாகக் கூறி எடப்பாடி பழனிசாமி ஏமாற்றினார் என  பிரேமலதா விஜயகாந்த் ஆதாரத்தை வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சாமி தரிசனம் செய்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “தே.மு.தி.கவை அரை சதவீத ஓட்டு கட்சி என எடப்பாடி பழனிசாமி விமர்சிக்கிறார். ஆனால் பழனிசாமி இரு ஆண்டுகளுக்கு முன்பு ராஜ்ய சபா சீட்டு தருவதாக வாக்குறுதி அளித்தார். எடப்பாடி பழனிசாமி சொன்ன வார்த்தையை நாங்கள் நம்பினோம் ஆனால் எங்களை ஏமாற்றினார். எங்களை அரை பர்சென்ட் என்கிறார். எங்களுடன் கூட்டணி அமைக்கும்போது அது தெரியவில்லையா?.

உங்களுக்கு ஏன் வயிறு எரிகிறது. அங்க கருகிற வாசனை தமிழ்நாடு முழுக்க  வருகிறது. பிரச்சாரங்களில் கண்ணியம் தவறினால் மக்களே அடித்து விரட்டுவார்கள். தேமுதிக ICUவில் இருந்ததாக கூறும் இபிஎஸ் மே.4க்கு பிறகு ICUக்கு போகாமல் இருக்க வேண்டும். மிகவும் கீழ்த்தரமாக இபிஎஸ் தொடரந்து பேசினால் எங்களுக்கும் கீழ்த்தாக பேச தெரியும். 2011-ல் இருந்து 2026 வரைக்கு உங்க கூட தானே இருந்தோம். இப்படி பேசுவது ஒரு முதலமைச்சர் வேட்பாளருக்கு இது அழகல்ல” என்றார்.

error: Content is protected !!