Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கஞ்சா விற்பனை செய்த பெண் கைது

திருச்சி எடமலைப்பட்டிபுதுரை அடுத்த ராம்ஜிநகர் மில் காலனி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக எடமலைப்பட்டிபுதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து
சப்-இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது அதே பகுதியை சேர்ந்த பிச்சை என்பவர் மனைவி கோவிந்தம்மாள் (வயது 65 )என்பவர் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து கோவிந்தம்மாள்யிடம் இருந்து 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.பிறகுகோவிந்தம்மாள்யை ஜாமினில் விடுதலை செய்தனர்.

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த மூன்று பேர் கைது

திருச்சி பொன்நகர் ஜங்ஷன் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது
இதையடுத்து செசன்ஸ் கோர்ட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்த போது கொட்டப்பட்டு பகுதியை சேர்ந்த பார்த்திபன் (வயது 39)
என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து புகழைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். பிறகு அவரை ஜாமினில் விடுதலை செய்தனர்.
இதேபோன்று திருச்சி அரியமங்கலம் எஸ் ஐ டி மைதானம் அருகில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த அரியமங்கலம் அம்மன் குளத்தை சேர்ந்த பாலமுருகன் (வயது 36 )லட்சுமி புரத்தை சேர்ந்த சண்முகபிரியன் (வயது 36) ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். மேலும் சாகுல் ஹமீது என்பவரை தேடி வருகின்றனர் இந்த சம்பவத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து 2,300 கிராம் புகையிலை பொருட்களையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

error: Content is protected !!