Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பல கோடி போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்-2சொகுசு கார் பறிமுதல்

கரூர் அருகே இரண்டு சொகுசு கார்களின் பல கோடி மதிப்பிலான போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல், இரண்டு சொகுசு கார்களை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனர்.

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியில் கரூர் – ஈரோடு சாலை, புன்னம் பிரிவு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இரண்டு சொகுசு காரை போலீசாரை சோதனை செய்வதற்காக நிறுத்த முயன்றனர் அப்போது போலீசாரை கண்டதும் திடீரெனத் திரும்பித் தப்பிச் செல்ல முயன்றனர்.

சந்தேகமடைந்த போலீசார் காரை விரட்டிச் சென்று சுற்றி வளைத்தனர். காரில் இருந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட
காரை சோதனையிட்டபோது, அசல் 500 ரூபாய் நோட்டுகளுக்கு இடையில் கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட போலி ரூபாய் நோட்டுகளை பண்டல்களாகக் கட்டி நான்கு சூட்கேஸ் பேக்குகளில் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மொத்தம் பல கோடி ரூபாய் மதிப்பிலான போலி நோட்டு பண்டல்களைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.

சம்பவத்தில் ஈடுபட்ட சுந்தரமூர்த்தி (56), பாலகிருஷ்ணன் (25),ஜெயச்சந்திரன் (38),
கைது செய்யப்பட்ட மூவர் மீதும் ஏற்கனவே பல்வேறு மாவட்டங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.

போலி நோட்டுகளைக் கொடுத்துப் பொதுமக்களை ஏமாற்ற முயன்றதாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது மூவரும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்த போலி நோட்டுகளின் பின்னணியில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!