புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக. வேட்பாளர் டாக்டர் வை. முத்துராஜா தீவிரமாக தேர்தல் வாக்கு கேட்டு வருகின்றார். அவர் புதுக்கோட்டை நகரில் பல பகுதிக்கு சென்று தனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய கேட்டுக்கொண்டார்.
வாக்குகேட்டு வந்த திமுக. வேட்பாளருக்கு மா. மன்னர் கல்லூரி முன்னாள் பேராசிரியர் ச.விஸ்வநாதன் வாழ்த்து தெரிவித்தார். உடன் முன்னாள் எம்எல்ஏ. கவிச்சுடர் கவிதைப்பித்தன் உள்ளார்.
