திருச்சி மாவட்டத்தில் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 40 சதவீதத்துக்கு குறைவில்லாத மாற்றுத்திறனாளிகள் என 8593 பேர், தபால் வாக்கு செலுத்த படிவம் சமர்ப்பித்துள்ளனர். இவர்களின் வீடுகளுக்கு சென்று வாக்குகளை சேகரிக்க 85 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் வரும் 13, 14, 15 ஆகிய தேதிகளில் நேரில் சென்று வாக்குகளை பெற உள்ளனர். இத்தகவலை மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
