Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1000 உயர்வு

ஈரான், இஸ்ரேல் போருக்கு முன்பு வரை தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை, ஈரான் போர் தொடங்கியதும் குறையத் தொடங்கியது. பொதுவாக போர் நேரத்தில் தங்கம் விலை அதிகருக்கும் நிலையில், எதிர்மாறாக மேற்காசிய போர் தலைகீழாக மாற்றியது.

ஒவ்வொரு நாளும் கச்சா எண்ணெய் விலை மாற்றம் தங்கம் விலையில் பிரதிபலிக்கிறது. இதனிடையே போர் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தங்கத்தின் மீண்டும் முதலீடு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இதன் காரணமாக தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. தொடர்ந்து விலை உயர வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கணித்த நிலையில், இன்று (ஏப்., 09) ஒரு கிராமுக்கு ரூ.125 உயர்ந்து ரூ.14,125-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,000 உயர்ந்து ரூ.1,13,000-க்கும் விற்கப்படுகிறது. அதே போல் வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.265-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து ரூ.2,65,000-க்கும் விற்கப்படுகிறது

error: Content is protected !!