குளித்தலை அருகே வரகூர் கிராமத்தில் வாய் பேசத் தெரியாமல் சுற்றித்திரிந்த சுமார் 43 வயது மதிக்கத்தக்க வட மாநில நபரை கழுத்து அறுத்து கொலை செய்த ஆட்டுக்கறி வியாபாரி குளித்தலை காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வரகூர் கிராமத்தில் இரவு சுமார் 40 முதல் 43 வயது மதிக்கத்தக்க வாய் பேச தெரியாத வட மாநில நபர் சுற்றி திரிந்துள்ளார்.
கிராம பொதுமக்கள் இரவு அவசர அழைப்பு 100 க்கு போன் அழைத்துள்ளனர். லாலாபேட்டை சிறப்பு

காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் வரகூர் கிராமத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையில் வாய் பேச தெரியாத வட மாநில நபரை அதே கிராமத்தைச் சேர்ந்த வையாபுரி மகன் பிரபு வயது 35. ஆட்டு வியாபாரம் மற்றும் கறி வியாபாரம் செய்து வரும் நபர். நான் அந்த நபரை அழைத்துக் கொண்டு அய்யர்மலை பகுதியில் விட்டுவிடுகிறேன் என்று கூறியதன் பேரில் விசாரணைக்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் திரும்பி சென்று விட்டார்.
பின்னர் ஆட்டு வியாபாரி பிரபு அந்த நபரை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
மது போதையில் இருந்த ஆட்டி வியாபாரி பிரபு தனது சித்தப்பா வீட்டில் உள்ள கட்டிலில் தூங்க சொல்லியுள்ளார்.
அப்போது தான் ஆடு அறுக்கும் கத்தியால் வட மாநில நபரை கழுத்தில் அறுத்து படுகொலை செய்துள்ளார்.
படுகொலை செய்த ஆட்டு வியாபாரி பிரபு அதிகாலை ஐந்து முப்பது மணி அளவில் குளித்தலை காவல் நிலையத்தில் தான் கொலை செய்து விட்டதாக கூறி சரண் அடைந்துள்ளார்.
பின்னர் குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் குளித்தலை காவல் ஆய்வாளர் கருணாகரன் லாலாபேட்டை காவல் ஆய்வாளர் சதீஷ் மற்றும் போலீசார் படுகொலை நடந்த சம்பவ இடத்தில் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் விசாரணையில் பொதுமக்கள் தரப்பில் படுகொலை செய்யப்பட்ட நபர் எங்கள் கிராமத்தில் இரவில் பகவதி அம்மன் கோவில் பகுதி மற்றும் தெருக்களில் சுற்றி திறந்தார் எனவும் வாய் பேச தெரியாது பார்வைக்கு வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு போல் தெரிகிறது எனவும் தெரிவித்தனர்.
சரண் அடைந்த ஆட்டு வியாபாரி பிரபு இரவு தனது வீட்டில் கட்டில் தூங்கும் போது என்னை முறைத்து பார்த்தார் அதனால் நான் ஆர்டருக்கும் கத்தியால் கழுத்தில் அறுத்து கொலை செய்தேன் என வியாபாரி பிரபு கூறியதாகவும் விசாரணையில் தெரியவந்தது.
படுகொலை செய்யப்பட்ட வட மாநிலத்தின் உடலை லாலாபேட்டை போலீசார் கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் உடல் கூர் ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
வரகூர் கிராமத்தில் வட மாநில நபரை தனது வீட்டில் வரவழைத்து கட்டிலில் படுக்க வைத்து கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
