ஜெயலலிதா ஒரு அரசியல்வாதி, ஆனால் EPS ஒரு வியாபாரி என கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார். இருவருக்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருப்பதாக கூறிய அவர், அதிகமான தொகுதிகளை கொடுத்து எங்களை வளர்த்துவிடக் கூடாது என அதிமுக நினைத்ததாகவும் பேசியுள்ளார். இம்முறை EPS-க்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதே தங்கள் லட்சியம் எனவும் கூறியுள்ளார்.
