Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

50 ஆயிரம் வித்தியாசத்தில் 4 தொகுதியிலும் வெற்றி… கரூரில் அசோக் பிரச்சாரம்

கரூர் திமுக வேட்பாளர் ஆசி தியாகராஜனுக்கு தேரோட்டியாக மாறிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார்.

தமிழகத்தில் வருகின்ற 23ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதை ஒட்டி அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளை மும்முறமாக செய்து வருகின்றனர்.

அதிமுக, திமுக, தமிழக வெற்றி கழகம்,நாம் தமிழர் என நான்கு கட்சி வேட்பாளர்களும் தேர்தல் களத்தில் தற்போது மக்களை சந்தித்து வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட

பசுபதிபாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கரூர் சட்டப்பேரவை திமுக வேட்பாளர் ஆசி தியாகராஜனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரரும், கரூர் திமுக தேர்தல் பொறுப்பாளருமான அசோக்குமார் இரவு, பகல் பாராமல் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் இன்று பசுபதிபாளையம் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் திமுக வேட்

பாளர் ஆசி தியாகராஜன் பொதுமக்கள் மத்தியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அதை தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரரும்,கரூர் மாவட்ட திமுக தேர்தல் பொறுப்பாளருமான அசோக் குமார் 50,000 வாக்கு வித்தியாசத்தில் கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற வேண்டும். இவ்வாறு வாக்காளர்

மத்தியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

அதைத்தொடர்ந்து திமுக வேட்பாளர் ஆட்சி தியாகராஜனை இருசக்கர வாகனத்தில் அமர வைத்து

நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார்.

ஆசி தியாகராஜன் திமுக வேட்பாளரை ஆதரித்து தேரோட்டியாக மாறிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் அவர்களின் இருசக்கர வாகன பயணம் அங்குள்ள திமுக இளைஞர் மத்தியில் உற்சாகத்தையும், ஆரவாரத்தையும் ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சியில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

error: Content is protected !!