Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வாக்களிப்பதன் அவசியம் குறித்து பெண் ஊழியர்கள் பைக் ரேலியில் விழிப்புணர்வு

தேர்தல் ஆணையம் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மத்திய பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய காற்றடைத்த பலூனை கோவை மாவட்ட கூடுதல் ஆட்சியர் சங்கேத் பல்வந்த் வாகே, பறக்கவிட்டார்.

பின்னர் உரிமி இசை முழங்க மலைவாழ் மக்கள் பாரம்பரிய நடனமாடி பொதுமக்களிடையே விழிப்புணர் ஏற்படுத்தியதை கூடுதல் ஆட்சியர் பார்வையிட்டார். தொடர்ந்து வருவாய்த்துறை பெண் ஊழியர்கள் இருசக்கர வாகனங்கள் இயக்கி பொள்ளாச்சி நகர் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

error: Content is protected !!