Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாம்பை கூட நம்பலாம், ஆனால் பாஜக-வை நம்ப முடியாது-மம்தா பேச்சு

அசாம் தேர்தலில் வாக்களிக்க வெளி மாநிலத்தவர்களை அழைத்து வந்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த சூழலில் பாம்பை கூட நம்பி விடலாம், ஆனால் பாஜக-வை நம்ப முடியாது மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சனம் செய்து உள்ளார். மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள டெண்டுலியாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பாஜக மீது கடும் தாக்குதல் தொடுத்து, “ஒரு பாம்பை கூட நம்பலாம்; ஆனால் பாஜகவை நம்ப முடியாது,” என்று கூறி உள்ளார்.

அசாம் மாநிலத்தில் வெளியிலிருந்து வாக்காளர்களை கொண்டு வந்ததாக பாஜக மீது குற்றம் சுமத்தி பேசிய மம்தா பானர்ஜி, “மாநிலத்தின் குடியிருப்பாளர்களின் வாக்குகளைக் கொண்டு வெற்றி பெற முடியும் என்பதில் நம்பிக்கை இல்லாததாலேயே, அசாம் தேர்தலில் வாக்களிப்பதற்காக பாஜக வெளியிலிருந்து ஆட்களை கொண்டு வந்தது,” என்று சாடினார்.

மேற்குவங்கத்தில் பிளவு அரசியலில் ஈடுபடுவோருக்கு எதிராகவும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்தார். “கலவரங்களின் மூலம் ஆட்சிக்கு வருபவர்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள். வங்காளிகளுக்கும் வங்காளிகள் அல்லாதவர்களுக்கும் இடையே சிலர் பிளவை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். இங்கே வசிக்கும் வெளிமாநிலத்தவர்கள் அமைதியுடன் வாழுங்கள். நாங்கள் ஒன்றும் பாஜக அல்ல. பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடத்தும் ஒடிசா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் வங்காளிகள் ஒடுக்கப்படுகிறார்கள். ஆனால் நாங்கள் இங்கே வங்காளிகள் அல்லாதவர்களை ஒடுக்குவது போன்ற செயல்களில் ஈடுபடுவதில்லை. எனவே பாரதிய ஜனதாவினரின் வீண் பேச்சுக்களை காதில் போட்டுக்கொள்ளாதீர்கள். இங்கே அமைதியுடன் வாழுங்கள் என்று பேசினார்.

தொடர்ந்து பேசிய மம்தா மத்தியில் ஆளும் பாஜக அரசின் கீழ் நாட்டில் உள்ள எந்தவொரு அமைப்பும் நடுநிலையுடன் செயல்படவில்லை என்றும், “பாஜக அவை அனைத்தையும் விலைக்கு வாங்கிவிட்டது” என்றும் குற்றம் சாட்டினார். “உத்தரப்பிரதேசத்திலிருந்து 50,000 பேர் கொண்ட ஒரு ரயில் நிறைய மக்கள் அசாம் தேர்தலில் வாக்களிக்க கொண்டுவரப்பட்டனர். மேற்கு வங்கத்திலும் இதே போல வெளியிலிருந்து ஆட்களைக் கொண்டு வர இதே தந்திரத்தை பாஜக பயன்படுத்த முயல்வதாகவும், இதனால் தான் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் மம்தா குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!