தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதம் பணியாற்றி வந்தார். இந்தநிலையில் இந்திய தேர்தல் ஆணையம் திடீரென டேவிட்சனை மாற்றம் செய்து சந்தீப் மிட்டல் என்பவரை தேர்தல் ஆணையம் நியமனம் செய்தது. இந்த நியமனத்திற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்தது. இது தொடர்பாக டி.ஆர.பாலு எம்பி தேர்தல் கமிஷனுக்கு எழுதிய கடிதத்தில் டிஜிபி சந்தீப் மிட்டல் பாஜாக ஆதரவாளர் என்றும் அவரது நியமனத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் இல்லையெனில் இதுகுறித்து நீதிமன்றத்தில் செல்லவுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இதன் எதிரொலியாக சந்தீப் மிட்டல் நியமனத்தை தேர்தல் கமிஷன் ரத்து செய்தது. இதனையடுத்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு டிஜிபியாக டேவிட்சன் தொடர்ந்து பணியாற்றுவார்.
