தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறுவதை ஒட்டி, கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பாதுகாப்புப் படையினரின் பிரம்மாண்ட கொடி அணிவகுப்பு பேரணி இன்று நடைபெற்றது.
வாக்குச்சாவடிகளின் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை பொள்ளாச்சி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார்.
கோவை சாலையில் உள்ள மகாலிங்கபுரம் பகுதியில் தொடங்கிய இந்த அணிவகுப்பு பேரணி பொள்ளாச்சி நகர் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளான உடுமலை சாலை, கிழக்கு காவல் நிலைய சாலை, வெங்கட்ராமன் பள்ளி சாலை, பாலக்காடு சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் வழியாக ஊர்வலமானது நடைபெற்று வந்த நிலையில், இந்தப் பேரணி பொள்ளாச்சி காவலர் திருமண மண்டபத்தில் நிறைவடைந்தது.
இந்த கொடி அணி வகுப்பு பேரணியில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர், கேரளா மாநில போலீசார், கோவை மாவட்ட காவல்துறையினர் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
