Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் பரபரப்பு: சொத்துதகராறு காரணமாக வீட்டில் பெட்ரோல் குண்டு வீசுவதாக மிரட்டல்

திருச்சியில் சொத்து தகராறு காரணமாக உறவினர் வீட்டிற்கு பெட்ரோல் குண்டுவீசி, மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருச்சி பீமநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மனைவி லதா (58) கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ராஜகோபால் இறந்துவிட்டார் இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ராஜகோபாலுக்கு இரண்டு சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரன் உள்ளனர். அவரது சகோதரரான குமாருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதற்கு முன் ராஜகோபால் மற்றும் குமார் ஆகியோர் கூட்டு குடும்பமாக ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக குடும்பம் பிரிந்தது இதில் குமார் தன் மனைவி கவிதா மற்றும் இரண்டு மகன்களான நந்த குரு மற்றும் குமரகுரு ஆகியோருடன் பிரிந்து சென்றார். இந்த நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு குமாரும் இறந்தார் இதனிடையே ராஜகோபால் மற்றும் குமார் குடும்பத்திற்கு இடையே சொத்து தகராறு ஏற்பட்டது இதனால் குமாரின் மகனான நந்தகுரு (21 )பீமநகர் பங்காளி தெரு பகுதியில் உள்ள ராஜகோபால் வீட்டிற்கு சென்று அங்கிருந்த லதாவிடம் சொத்து குறித்து கேட்டு தகராறு செய்துள்ளார் தொடர்ந்து லதாவின் மகளான திவ்யாவை தாக்கியுள்ளார் மேலும் தான் மது பாட்டிலில் நிரப்பி வந்த பெட்ரோலை வீட்டில் வீசி விடுவதாக கூறி மிரட்டி சென்றுள்ளார் இது குறித்து பாலக்கரை போலீசார் வழக்கு பதிந்து நந்தகுருவை கைது செய்து சிறையில் அடைத்தனர் அவருடன் வந்த ஆஷிக் மற்றும் நிஜாம் ஆகிய இரண்டு வாலிபர்களை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!