65 வயது மதிக்கத்தக்க முதியவர் சாவு
திருச்சியில் உயிரிழந்த அடையாளம் தெரியாத முதியவர் உடலை மீட்டு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். திருச்சி கீழபுஞ்சப்பூர் சோலார் நிலையம் அருகே அடையாளம் தெரியாத 65 வயது மதிக்க தக்க முதியவர் இறந்து கிடப்பதாக கேஸ் சாத்தனூர் கிராம நிர்வாக அலுவலர் குமரவேலுக்கு நேற்று தகவல் கிடைத்தது தொடர்ந்து இடங்களை பற்ற புதூர் போலீசார் உடன் அங்கு சென்று முதியவர் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து எடமலை பட்டிப்புதூர் போலீசார் வழக்கு பதிந்து இருந்த முதியவர் யார் என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
கூலித்தொழிலாளி சாவு
திருச்சியில் கூலித் தொழிலாளி வழிப்பு வந்து உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகரை சேர்ந்தவர் மணிகண்டன் 38 கூலித்தொழிலாளி கடந்த 2024 ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் ஒரு காலை இழந்தார். இந்த நிலையில் நேற்று இவர் திருச்சி அரியமங்கலம் எஸ் ஐ டி மயானம் அருகே இருந்தார் அப்போது திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டது உடனடியாக அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இருந்துவிட்டதாக தெரிவித்தனர் இது குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
இதய நோயால் பெண் சாவு
திருச்சியில் இதே நோயால் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி ஸ்ரீரங்கம் திருவானைக்கோவிலை சேர்ந்தவர் ராஜேஸ்வரி 58 இவர் இதயம் சார்ந்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் கடந்த 13ம் தேதி திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது அவரை உடனடியாக அவர் ஆம்புலன்ஸ் வாயிலாக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அங்கு அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர் இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
துப்புரவு பணியாளர் தற்கொலை
திருச்சியில் துப்புரவு பணியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகரை சேர்ந்தவர் முருகன் 56 இவர் தற்காலிக தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார் மேலும் அவர் காச நோயால் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டிருந்தால் இந்த நிலையில் மன உளைச்சலில் நேற்று முருகன் மருத்துவமனை வளாகத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
கள்ளத்தனமாக மது விற்ற வாலிபர் கைது
திருச்சி ஓயமாரி மயானம் அருகே கள்ளத்தனமாக மதுவிற்பனை நடப்பதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது தொடர்ந்து போலீசார் அங்கு சோதனை நடத்தி மது பாட்டில்கள் விற்ற ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகர் முதல் தெருவை சேர்ந்த குமார் 30 என்ற வாலிபரை கைது செய்தனர் அவரிடம் இருந்து 45 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது அதன் மதிப்பு ரூபாய் 5500 என்பது தெரியவந்தது.
