Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி ஜிஎச்-ல் சிகிச்சை பெற்ற விசாரணை கைது திடீர் சாவு

திருச்சி மத்திய சிறையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கோட்டையூர் பகுதியை சேர்ந்த நடராஜ் (61) என்பவர் புதுக்கோட்டையில்நடந்த குற்றவழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் விசாரணை கைதியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் இவருக்கு ரத்த கொதிப்பு மற்றும் சர்க்கரை நோய் இருந்தது. இதையடுத்து கடந்த 17 ந்தேதி நடராஜனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் கைதிகள் வார்டில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பெற்று வந்த நட்ராஜ் திடீரென்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து மத்திய சிறை அதிகாரி ராஜேஷ் கண்ணன் அரசு மருத்துவமனை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!