டெல்லி, நொய்டா, கிரேட்டர் நொய்டா, குர்கானில் ஒப்பந்த தொழிலாளர்கள் மீதான அடக்குமுறைகளை கைவிட வேண்டும். குறைந்தபட்ச சம்பளம் ரூ. 26,000 வழங்க வேண்டும். தொழிலாளர்கள் உரிமைகளை பறிப்பதை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு திருச்சி மாநகர் மாவட்ட குழுக்கள் சார்பில் (வெள்ளிக்கிழமை) இன்று பி.எஸ்.என். எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்ட பொருளாளர் மணிகண்டன், மாவட்ட துணைத்தலைவர் சீனிவாசன், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சந்திரன், தரைக்கடை மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகள் சங்க மாவட்ட தலைவர் கணேசன், கட்டுமான தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் சந்திரசேகர், பி.எஸ்.என். எல்.இ.யூ மாவட்ட செயலாளர் செல்வராஜ் ஆகியோர் பேசினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
