Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வால்பாறையில் 9 பேர் பலி.. குடியரசுத்தலைவர் இரங்கல்

கேரளம் மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த 16 பேர் சுற்றுலா வேனில் புதன்கிழமை (ஏப்.15) கோவை மாவட்டம் வால்பாறைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

வால்பாறை முழுவதும் சுற்றிப் பார்த்துவிட்டு வெள்ளிக்கிழமை (ஏப்.17) மாலை பொள்ளாச்சி வழியாக கேரளம் செல்வதற்காக வேனில் வந்து கொண்டிருந்தபோது வால்பாறை மலைப்பாதையில் உள்ள 13-வது கொண்டை ஊசி வளைவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தடுப்பு சுவரில் மோதி 800 அடி வனப்பகுதியில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து 11-வது கொண்டை ஊசி வளைவில் விழுந்து நொறுங்கியதில் 9 பேர் பலியாகினர்.

இந்த சம்பத்துக்கு இரங்கல் தெரிவித்த குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தன்னுடைய ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டிருப்பதாவது:

“தமிழகத்தின் கோவையில் நிகழ்ந்த துயரமான சாலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளால் நான் மிகுந்த வேதனையடைந்துள்ளேன்.

உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்வதுடன், காயமடைந்தோர் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!