Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நொய்டா வன்முறை வழக்கு: தலைமறைவாக இருந்த ஆதித்யா ஆனந்த் திருச்சி ரயில் நிலையத்தில் பிடிபட்டார்

உத்தரபிரதேச மாநிலத்தில், கவுதம் புத்த நகர் மாவட்டத்தில் அருகே நொய்டாவில் நடைபெற்ற தொழிலாளர் போராட்டத்தில் எற்ப்பட்ட வன்முறையில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த ஆதித்யா ஆனந்த், தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். கவுதம் புத்த நகர் காவல்துறையும் சிறப்பு அதிரடிப்படையும் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டன.

காவல்துறையினரின் தகவலின்படி, கவுதம் புத்த நகர் பகுதியில் நடந்த தொழிலாளர் போராட்டங்களில் வன்முறை சம்பவங்களைத் தூண்டியதில் ஆதித்யா ஆனந்த் முக்கிய பங்கு வகித்துள்ளார். சம்பவத்திற்குப் பிறகு அவர் தலைமறைவாக இருந்து வந்தார். அவரை பிடிக்க தகவல் வழங்குபவர்களுக்கு ரூ.1 லட்சம் வெகுமதியும் அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், அவருக்கு எதிராக ஃபேஸ்-2 காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்ததுடன், அவரைக் கைது செய்ய உள்ளூர் நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணையும் பிறப்பித்திருந்தது. இந்நிலையில் ஆதித்யா ஆனந்தை கைது செய்ய காவல்துறையினர் பல மாநிலங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இறுதியாக அவரை திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.

error: Content is protected !!