திருச்சி மரக்கடையில் இருந்து மாநகராட்சி மினி குப்பை லாரி வண்டி குப்பைகளை ஏற்றிக்கொண்டு இன்று பிற்பகல் 12 15 மணிக்கு திருவானைக்காவல் மேம்பாலம் ஏறும் போது வண்டியில் இருந்த ஒயர் கனெக்சன் ஸ்டார்ட் ஆகி புகை வர தொடங்கியது. இதனை பின்னால் வந்த வாகனங்கள் கவனித்து வண்டி ஓட்டும் டிரைவரிடம் தெரிவித்தனர். டிரைவர் சிவக்குமார் வண்டியை ஓரங்கட்டி நிறுத்தி உள்ளார். பின்னர் வண்டியில் இருந்து தீ வேகமாக பரவியது இதனால்குப்பை வண்டி முழுவதுமாக எரிந்தது இது குறித்து ஸ்ரீரங்கம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.அதற்குள் குப்பை மினி லாரி வண்டி முழுவதுமாக எரிந்து விட்டது இதனால் திருவானைக்காவல் மேம்பாலத்தில் ஏறும் அனைத்து வாகனங்களும் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டது சுமார் அரை மணி நேரம்

போக்குவரத்து ஸ்தம்பித்தது இதுகுறித்து மாநகராட்சி குப்பை லாரியை ஒட்டி வந்த ஸ்ரீரங்கம் மேலூர் கீழத் தெருவை சேர்ந்த சிவக்குமார் சிவக்குமார் வயது 22 அவர் கூறும் போது இன்று பிற்பகல் 12 மணிக்கு மரக்கடையில் இருந்து இந்த குப்பைகளை ஏற்றிக்கொண்டு ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள குப்பை கழிவுகளை கொண்டு உரம் தயாரிக்கும் இடத்திற்கு எடுத்துச் சென்றுள்ள போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. நானும் சிறுகாம்பூர் பகுதியைச் சேர்ந்த ரங்கநாதன் வயது 42 இருவரும் இந்த வண்டியில் வந்து உள்ளோம் என்றனர் தற்போது வீசும் அனல் காற்றால் வண்டியில் இருந்த மின் ஒயர் சாட்டேஜ் ஆகி இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
