அதிமுக தலைவர்கள் தங்கள் மீதான ஊழல் வழக்குகள் காரணமாக பாஜக பிடியில் சிக்கியுள்ளதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். கன்னியாகுமரி பிரசாரத்தில் பேசிய அவர், டெல்லியில் இருந்து தமிழ்நாட்டை ஆள பாஜக முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார். அந்தந்த மாநில மக்கள்தான் அந்தந்த மாநிலங்களை ஆள வேண்டும் என்ற அரசமைப்பை பாஜக மதிப்பதில்லை எனவும் சாடியுள்ளார்
