கரூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆசி தியாகராஜன் அனல் பறக்கும் இறுதி கட்டப் பிரச்சாரம் வெயிலையும் பொருட்படுத்தாமல் உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு.
கரூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக வேட்பாளர் ஆசி தியாகராஜன் இன்று தனது இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இன்று காலை முதலே கரூரின் பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளர் ஆசி

தியாகராஜன், குறிப்பாக நெரூர், வாங்கல், செங்குந்தபுரம், வேலுச்சாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று வாக்காளர்களைச் சந்தித்தார்.
வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தபோதிலும், அதைப் பொருட்படுத்தாமல் திறந்த பிரச்சார வாகனத்தில் நின்றவாறு உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.
பிரச்சாரத்தின் போது பொதுமக்கள் மற்றும் திமுக தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பொதுமக்களிடையே உரையாற்றிய வேட்பாளர்: திமுக ஆட்சியில் கரூருக்குக் கொண்டு வரப்பட்ட முக்கியத் திட்டங்களைப் பட்டியலிட்டார்.
உயர்மின் கோபுர மின் விளக்குகள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் மீண்டும் இரண்டாவது முறையாக பொறுப்பேற்றவுடன், மகளிருக்கான உரிமைத் தொகை 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். மேலும்,
காலை உணவுத் திட்டம் தந்து மாணவர்களின் பசி போக்கிய சின்னம் உதயசூரியன். நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் 13 முறை வென்ற வெற்றிச் சின்னமான உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டுமென பேசினார்.
