தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களை சேர்ந்த பதிவு செய்த அஞ்சல் வாக்குகளை அந்தந்த மாவட்டங்களுக்கு பிரித்து வழங்கும் பணி, திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் 80 ஆயிரத்து 873 அஞ்சல் வாக்குகள் பிரிக்கப்பட்டு, மாவட்ட வாரியாக அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் சரவணன் தெரிவித்துள்ளார்.
