தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23 மற்றும் அதற்கு முதல் இரு நாட்கள் ஏப்ரல் 21 மற்றும் 22 தேதிகளிலும், வாக்கு எண்ணிக்கை நாளான மே 4-ம் தேதியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் மட்டுமின்றி தனியார் பார்கள், நட்சத்திர விடுதிகளிலும் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நான்கு நாட்களிலும் விற்பனை மட்டுமின்றி, மதுபான தயாரிப்பு, மதுபானங்களை வாகனங்களில் கொண்டு செல்லுதல் என அனைத்து வகையான நடவடிக்கைகளுக்கும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலுக்காக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால், நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.350 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. ழக்கத்தை விட இரண்டரை மடங்கு அதிகமாக டாஸ்மாக் வசூல் கிடைத்துள்ளது.
