திருச்சி மாவட்டத்தில் உள்ள கிழக்கு, மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திரங்கள், டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள ஜமால் முகமது கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்த பாதுகாப்பு அறை இன்று காலை தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
