Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மர்மமாக தூக்கிட்டு இறந்து கிடந்த வாலிபரின் சடலம் மீட்பு.. ஜெயங்கொண்டத்தில் பரபரப்பு

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே செம்மண்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த பிரபு (எ) பிரபாகர் (35) கம்பி பிட்டர் ஆன இவர் வாரியங்காவல் கரைமேட்டு பகுதியில் எனது குடும்பத்தினருடன் ஒரே குடும்பமாக வசித்து வந்தார். இந்நிலையில் அவர் வாரியங்காவல் ஒயின்ஷாப் எதிரே முந்திரி தோப்பில் இலை கொடிகளால் கழுத்து நெறிக்கப்பட்டு தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதனை வழியாக சென்றவர்கள் பார்த்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த வந்த ஜெயங்கொண்டம் போலீசார் அவரது உடலை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு தலைமை பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அவர் எப்படி இங்கு வந்தார் ? அவர் தற்கொலை செய்து கொண்டார் ? அல்லது அவரை வேறு யாரேனும் முன்விரோதம் காரணமாக கொலை செய்திருப்பார்களா? என்பது பற்றி பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது இறந்து போன பிரபாகரனின் தந்தை பாண்டியன் உடல்நிலை சரியில்லாததால் படுக்கையில் உள்ளதாகவும்,. அவரது தாயார் சாவித்ரி கூலி வேலை செய்து குடும்பத்தை பார்த்து வருவதாகவும். மேலும் பிரபாகரனுக்கு சிவமணி என்ற தம்பியும், பிரியா என்ற தங்கையும் உள்ளதாகவும். தங்கைக்கு மட்டுமே திருமணம் நடந்துள்ளதாகவும். இறந்து போன பிரபாகரன் மற்றும் அவரது தம்பி சிவமணி ஆகி இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை எனவும் பிரபாகரன் தினமும் குடித்துவிட்டு வீட்டில் தனது தாய் தந்தையரிடம் தகராறு செய்ததாகவும் கூறினர். மேலும் அவர் நேற்று தான் சாகப்போவதாக கூறி விட்டு வீட்டை விட்டு வெளியில் வந்ததவர் பின்னர் வீடு திரும்பவில்லை . இதனால் அவரது பெற்றோர்கள் உறவினர்கள் என பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து இறந்து போனது பிரபு என்கிற பிரபாகரன் தான் என்பதை அவரது உறவினர்கள் உறுதி செய்தனர்.

error: Content is protected !!