Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஹெல்மெட் உங்கள் உயிர்க் கவசம் – கரூரில் காவல்துறை விழிப்புணர்வு முயற்சி

ஹெல்மெட் உங்கள் உயிர்க் கவசம் – கரூரில் காவல்துறை விழிப்புணர்வு முயற்சி: விழிப்புணர்வு பதாகையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திறந்து வைத்தார்.

கரூர் மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்களில் மட்டும் 385 சாலை விபத்துக்கள் இதில் 111 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஜீரோ விபத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தகவல்.

கரூர் மாவட்ட காவல்துறை மற்றும் பெட்ரோலிய வணிகர் சங்கம் சார்பில் பொதுமக்களிடையே

சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் விழிப்புணர்வு பதாகையை திறந்து வைத்தார்.

அந்த பதாகையில் “தலைக்கவசம் உங்கள் உயிர் கவசம்”, “ஹெல்மெட் Yes – பெட்ரோல் Yes” போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்ததுடன், ஹெல்மெட் அணியாமல் செல்லும் போது ஏற்படும்

விபத்துகளின் விளைவுகளை உணர்த்தும் புகைப்படங்களும் இடம் பெற்றிருந்தன.

இந்நிகழ்வில் வாடிக்கையாளர்கள் மற்றும் பெட்ரோல் பங்கு ஊழியர்களுடன் கலந்துரையாடிய காவல் கண்காணிப்பாளர், கரூர் மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்களில் மட்டும் 385 சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ளது என்றும், அதில் 111 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.

எனவே இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்றும், எதிர்காலத்தில் கரூர் மாவட்டத்தை ‘ஜீரோ சாலை விபத்து மாவட்டம்’ ஆக மாற்றுவது தான் நோக்கம் என்றும் அவர் கூறினார்.

மேலும், கரூர் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளின் முன்பாகவும் இதுபோன்ற விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் வைத்து கண்காணிக்க உள்ளதாக கூறினர்.

error: Content is protected !!