Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வெளிநாட்டு வேலை என வாலிபரிடம் ரூ. 6.95 லட்சம் மோசடி

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் அன்பு செல்வம் (34). இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சமூக வலைதளத்தில் வெளிநாட்டு வேலைக்கு ஆட்கள் தேவை என்று வந்த ஒரு விளம்பரத்தை பார்த்தார். அதில் உள்ள எண்ணில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவரிடம் பேசிய சிவகங்கையை சேர்ந்த ஒரு தம்பதி நியூசிலாந்து நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளனர். இதை நம்பிய அவரும் அவர்கள் கூறியபடி பல்வேறு தவணைகளில் ரூ.6 லட்சத்து 95 ஆயிரம் கொடுத்துள்ளார்.

பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் இருவரும் அன்பு செல்வத்தை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சுற்றுலா விசா மூலம் துபாய் நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கிருந்து நியூசிலாந்துக்கு அனுப்பி வைப்பதாக கூறியுள்ளார்கள். ஆனால் அவர்கள் கூறியபடி நியூசிலாந்துக்கு அனுப்பி வைக்கவில்லை. இதனால் அன்பு செல்வம் மீண்டும் தனது சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளார்.

இதை தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த வாலிபர் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத்திடம் புகார் அளித்தார். அதன்பேரில் சிவகங்கை நகர் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன், கணவன்- மனைவி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

error: Content is protected !!