Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

த.வெ.க. கூட்டணி கூட்டத்தைப் புறக்கணிக்கும் இடதுசாரிகள்

தவெக கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ளப்போவதில்லை என இடதுசாரி கட்சிகள் தெரிவித்துள்ளன. தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், சென்னையை அடுத்த கோவளத்தில் நாளை முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் தமிழக வெற்றி கழகம் (த.வெ.க.) சார்பில் கூட்டணிக் கட்சிகளுடனான முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு கூட்டணிக் கட்சித் தலைவர்களை அமைச்சர்கள் என். ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில், இன்று அமைச்சர்கள் என். ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா இடதுசாரி கட்சித் தலைவர்களையும் நேரில் சந்தித்து ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர். ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக), மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு அழைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், த.வெ.க. கூட்டணி கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தாங்கள் கலந்துகொள்ளப் போவதில்லை என்று இடதுசாரி கட்சிகள் தெரிவித்துள்ளன. அதேநேரத்தில், கூட்டத்தில் பங்கேற்காவிட்டாலும், முதல்-அமைச்சர் விஜய்யை இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. மக்கள் தொடர்பான கோரிக்கைகள் குறித்து மு. வீரபாண்டியன் மற்றும் பெ. சண்முகம் ஆகியோர் முதல்-அமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!