நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராமாயணம்’ திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. வால்மீகி ராமாயணத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய நிகழ்வுகள் இத்திரைப்படத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், ராவணனை உயர்த்தி காட்டும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. எனவே, இப்படத்திற்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழை ரத்து செய்து, திரையிடலை நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
ராமாயணம் திரைப்படத்திற்கு தடை கோரும் வி.எச்.பி அமைப்பு
