கோவில்பட்டியைச் சேர்ந்த கார்த்திகா என்பவர், தஞ்சாவூர் சித்தார்த்தன் என்பவரைச் செப்டம்பரில் திருமணம் செய்து நகை, பணத்துடன் மாயமான நிலையில், நவம்பரில் நாமக்கல்லில் ரஞ்சித்குமார் என்பவரையும் திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார். இரு மாப்பிள்ளைகளும் கோவில்பட்டியில் உள்ள வீட்டிற்குச் சென்றபோது இந்த மோசடி அம்பலமானது. போலிப் பெற்றோராக நடித்த முனீஸ்வரி, மாரியப்பன் மற்றும் தலைமறைவான கார்த்திகா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்தடுத்து 2 திருமணங்கள்: நகை, பணம் மோசடி இளம்பெண்
