Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

த.வெ.க., அரசு, காவிரி நதி நீர் சம்பந்தமான பிரச்னையில்,கவனம் செலுத்தவில்லை: இ.பி.எஸ்.

கர்நாடக முதல்வரை பார்த்தா முதல்வர் விஜய்க்கு பயமா..?

தஞ்சாவூர்,நவ.23 – தஞ்சாவூரில், அ.தி.மு.க., நிர்வாகி இல்ல திருமண விழாவில், கலந்துக்கொண்ட அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது: த.வெ.க., ஆட்சிக்கு வந்த பிறகு, டெல்டா பகுதியில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறுவை சாகுபடிக்கு தேவையான நீரை, டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு வழங்காததால், குறுவை சாகுபடி பாதிப்பை சந்தித்தது. முதல்வர் விஜய் மேட்டூர் அணைக்கு சென்று, 45 நாளுக்கு தண்ணி திறக்கப்படும் என அறிவித்து, தண்ணீரை திறந்தார். ஆனால், 45 நாளைக்கு தண்ணீர் போதது. சம்பா விளைச்சல், முழுமை பெற வேண்டும் என்றால், ஜனவரி இறுதி வரை, காவிரியில் தண்ணீரை விட வேண்டும். ஆனால், 45 நாளின் தண்ணீரை நிறுத்தி விட்டார்கள். அத்துடன் மேட்டூர் அணையில், 61 அடி தான் தண்ணீர் உள்ளது. இது மே மாதம் குடிநீர் தேவைக்கே போதாது.

த.வெ.க., அரசு, காவிரி நதி நீர் சம்பந்தமான பிரச்னையில், கவனம் செலுத்தவில்லை. காவிரி மேலாண்மை ஆணையம் இவ்வளவு டி.எம்.சி., தண்ணீரை திறக்க வேண்டும் என உத்தரவு போட்டார்கள். ஆனால், அந்த உத்தரவின்படி தண்ணீரை பெறுவதற்கான முயற்சியை த.வெ.க., அரசு எடுக்கவில்லை. முதல்வர் விஜய் தனி அக்கறை செலுத்தி, தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய பங்கு நீர் மாதாந்திர வாரிய வழங்க உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு பெற்று தந்து இருக்க வேண்டும். ஏற்கனவே, அ.தி.மு.க., பெற்று தந்த தீர்ப்பை கூட நடைமுறைப்படுத்தாத, கைலாகாத அரசு த.வெ.க., அரசு உள்ளது.

மேகதாது அணையை, கர்நாடக அரசு கட்டி தீர்வோம் என கர்நாடக முதல்வர் சிவக்குமார் கூறி வருகிறார். ஆனால், நமது முதல்வர் வாயே திறக்க மாட்டுகிறார். இதுக்கு எந்த பதிலும் கிடையாது. இதனால், விவசாயிகள் மிகப்பெரிய அச்சத்தில் உள்ளனர். விவசாயிகளின் அச்சத்தை போக்கும் விதமாக, மேகதாது அணை குறித்து, முதல்வர் விஜய் விவசாயிகளுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

கீழ்படுகை மாநிலத்தின் அனுமதி இல்லாமல், மேல்படுகை மாநிலத்தில், காவிரி ஆற்றின் குறுக்கே, எந்த ஒரு கட்டுமானத்தையும் தொடங்க கூடாது. தண்ணீரை தேக்க கூடாது என்ற தீர்ப்பை அ.தி.மு.க., பெற்று தந்துள்ளது. அதை நடைமுறைப்படுத்தவில்லை. காவிரி மேலாண்மை ஆணையம் காவிரியில் 11 டி.எம்.சி., தண்ணீரை திறக்க உத்தரவிட்டும், திறக்கவில்லை. இது தொடர்பான தமிழக அரசின் வழக்கை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அந்த அளவுக்கு இவர்களின் நிர்வாகம் உள்ளது. சரியான வாதத்தை எடுத்து வைக்கவில்லை. இதனால், டெல்டா மாவட்ட விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!
Secret Link