திருச்சி செந்தண்ணீர்புரம் லால்பகதூர் சாஸ்திரி தெருவை சேர்ந்தவர் ஜெயசூர்யா (55). இவர் கேஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் வேலை பார்த்து வந்தார். இவருக்கு குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக மனைவி மற்றும் மகனை பிரிந்து தனியாக வசித்து வந்தார். மேலும் இவருக்கு குடி பழக்கம் இருந்து உள்ளது. இதைத்தவிர இவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில் கடந்த 30 ந்தேதி ஜெயசூர்யா வீட்டில் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து பொன்மலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
