திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு முடிவடைந்ததை தொடர்ந்து, திருச்சி மேற்கு. மணப்பாறை, திருவரங்கம், திருச்சி கிழக்கு. திருவெறும்பூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு செய்யப்பட்ட எண்ணும் இயந்திரங்கள் திருச்சி ஜமால் முகமது கல்லூரி வாக்கு மையத்திலும், இலால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் (தனி) ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு செய்யப்பட்ட இயந்திரங்கள் புலிவலம் ஒயாசிஸ் தொழில்நுட்பக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திலும் பாதுகாப்பாக வைப்பறையில் வைக்கப்பட்டு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மத்திய பாதுகாப்பு படை மற்றும் காவல் துறை பாதுகாப்புடனும் வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.மேற்படி திருச்சி ஜமால் முகமது கல்லூரி வாக்கு எண்ணும் மையம் மற்றும் புலிவலம் ஓயாசிஸ் தொழில்நுட்பக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் நாளை 4.ந்தேதி அன்று வாக்கு எண்ணிக்கை பணிகள் நடைபெற உள்ளது.ஆகவே இந்த இரண்டு வாக்கு எண்ணும் மைய வளாகம் முழுவதும் பாதுகாப்பு நலன் கருதி ட்ரோன் கேமராக்கள் மற்றும் எந்தவொரு ஆளில்லாத பறக்கும் எந்திரங்களும் இன்று முதல் நாளை 4ந் தேதி வரை பறக்கதடை விதிக்கப்படுகிறது.மேற்கண்ட தகவலை திருச்சிர மாவட்ட தேர்தல் அலுவலர்,மாவட்ட கலெக்டர் சரவணன், தெரிவித்துள்ளார்.
